Wednesday, November 24, 2010

Aruljodhi Vallalar: வள்ளலார் கட்டுரைகள்

Aruljodhi Vallalar: வள்ளலார் கட்டுரைகள்

வள்ளலார் கட்டுரைகள்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


அன்புடையீர்!

எல்லாம் வல்ல சிதம்பரம் ராமலிங்க சுவாமிகளின் அருளாசியால் சுத்த சன்மார்க்கத்தை பற்றிய கட்டுரைகள் கீழ்காணும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

please visit this link.

www.vallalarspace.com/kumaresan

thank you

with warm regards

K.Kumaresan

Monday, March 8, 2010

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

பர ஞானம்

காவித்துணியைக் கட்டிக் கொண்டு , மந்திர தந்திரங்களை செய்து கொண்டு, தீட்சை கொடுத்து உபதேசம் செய்கின்றவர்களும் ஒரு சமயம் மறைந்து போகின்றனர். கடவுள் தான் நமக்கு உண்மைக் குருவாக உள்ளார். கடவுள் உண்மையை உணர்ந்து கடவுள் மயமானவர்கள் தான் உண்மைக் குரு. இந்நிலையை அடைந்த உத்தம மாமனிதர் –திருவருட்பிரகாச வள்ளலார் எனப் போற்றப்படும் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள். எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஐந்தொழில் செயலை வள்ளல் பெருமானுக்கு அளித்து விட்டார். வள்ளலுக்கு கொடுத்து விட்டார் எனில் வள்ளல் பெருமான், இறைவன் , இருவரும் இரண்டற்ற ஒன்றாகவே உள்ளனர், அல்லது 2½ நிலையில் உள்ளனர்.( ½ + ½)
************

எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எல்லா உயிர்களிலும், எல்லா செயல்களிலும், எல்லா அண்டங்களிலும் இருந்துக்கொண்டு தன்னுடைய தனிப்பெருங்கருணையினால் உலக இயக்கத்தையும், பிரபஞ்ச இயக்கத்தையும் தானே நடத்திக்கொண்டு வருகிறார்.
எனவே அத்தகைய இறைவனின் தனிப்பெருங்கருணையை ஒவ்வொரு நாளும் நினைத்து தங்களுடைய மகா மாயையை போக்கிக்கொள்ளவே ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் சத்விசாரம் செய்யுமாறு வலியுறுத்துகிறார்.

மேலும் சத்விசாரத்தின் போது வீண் விவாதங்கள் செய்ய கூடாது. நம்முடைய மாயையை போக்கிக்கொள்ளவே சத்விசாரம். எனவே நம்முடைய ஆன்ம பலம் கூடுவதற்கு உலகியியலில் ஜீவ காருண்ய உயிர் இரக்கம், ஆன்ம நேய ஒருமைப்பாடு மற்றும் குரு பக்தி மிகவும் அவசியமாகிறதாம்.

குரு பக்தி இல்லாமல் , குருவின் அருள் இல்லாமல் சுத்த சன்மார்க்க வாழ்வில் யாராலும் ஈடுபட முடியாதாம். இவ்வுலகில் காவித்துணியைக் கட்டிக் கொண்டு , மந்திர தந்திரங்களை செய்து கொண்டு, தீட்சை கொடுத்து உபதேசம் செய்கின்றவர்களும் ஒரு சமயம் மறைந்து போகின்றனர். கடவுள் தான் நமக்கு உண்மைக் குருவாக உள்ளார். கடவுள் உண்மையை உணர்ந்து கடவுள் மயமானவர்கள் தான் உண்மைக் குரு. இந்நிலையை அடைந்த உத்தம மாமனிதர் –திருவருட்பிரகாச வள்ளலார் எனப் போற்றப்படும் சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள். எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஐந்தொழில் செயலை வள்ளல் பெருமானுக்கு அளித்து விட்டார். வள்ளலுக்கு கொடுத்து விட்டார் எனில் வள்ளல் பெருமான், இறைவன் , இருவரும் இரண்டற்ற ஒன்றாகவே உள்ளனர், அல்லது 2½ நிலையில் உள்ளனர்.( ½ + ½)

உடல்நிலை-1, உயிர்நிலை-1 கடந்து ஆன்ம நிலையில் அவர் பாதி, இறைவன் பாதி என்ற 2. ½ நிலை. ம் ½ அ-1 , உ-1 .

எனவே பிறரை குறை கூறி நம்மால் சன்மார்க்க அனக வாழ்வில் ஈடுபட முடியாது. நான் சன்மார்க்க வாழ்வில் ஈடுபடுகிறேன் என்று பெருமை பாராட்டவும் கூடாது. நற்றாள் தொழு என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க, சதா சர்வ காலமும் அருள்ஜோதியின் ஞாபகமாக செய்யும் வேலையிலும், பிற உயிர்களிடத்தும் தயா ஞானத்தை வெளிப்படுத்தி அதாவது கருணை வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற அளவில் தொண்டு செய்து வாழ வேண்டுமாம்.

ஆனால் இப்பக்குவ நிலைக்கு ஆன்மா வருவதில்லை. திருவருட்பா அகவலை ஆயிரமாயிரம் தடவை படித்து சாதி வேற்றுமை, இன வேற்றுமை, பார்த்தால் எவ்வாறு பக்குவ நிலைக்கு வர முடியும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலையையும், சாதி, சமய வேற்றுமைகளையும் கடக்க வேண்டும் அல்லவா! அவ்வாறு செய்வதில்லை. சாண் ஏறினால் முழம் இறங்கி விடுகின்றோம். தயவு இல்லாமல் ஒருவரை ஒருவர் குறை கூறுகிறோம். தயவு இல்லாமல் மரணமில்லா பெருவாழ்வை எதிர்ப்பார்க்கிறோம்.

உயிர்களிடத்தில் கருணை காட்டுவதை விடுத்து , தயவு- கருணை எது சிறந்தது என்று விவாதம் நடத்துகிறோம். தயா கருணை மூர்த்தியே அருட்பெருஞ்சோதி என்பதை மறக்கிறோம் அல்லது மறுக்கின்றோம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அன்பாக, விசுவாசமாக, இரக்கமாக, கருணையாக, இப்பொழுது தயவாக.

எனவே பக்குவநிலையின் உச்சமே ஞானத்தின் ஞானமாகிறதாம். 16 நிலை- பூரணநிலை. (16 கலை சந்திரன் பூரண சந்திரன் – பௌர்ணமி ) அதுபோல் பக்குவ மனிதன் –எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பார்த்து சதா தயவு செய்யும் போது, பூரண சந்திர பிரகாச நிலை உண்டாகி சுத்த, பிரணவ, ஞான தேகத்தை இவ்வான்மா பெறுகிறதாம். சுத்த சன்மார்க்கத்தின் உச்ச நிலையும் இதுவாகிறதாம். திருவருட் பிரகாச வள்ளலாரும் இப்பக்குவ நிலைக்கு வரும் ஆத்மாக்களை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டு ஐந்தொழில் காரியப்பாடுகளை செய்துக்கொண்டிருக்கிறாராம்.

தொடரும்..,

தகவல் உதவி:

1. அருள்ஜோதி ஸ்ரீ ஞான குரு வள்ளல் பெருமானின் தனிப்பெருங்கருணை.